தம் பிரம்ம ஆஹ: அபிதாவத மம யசஸா விரஜாம்தன்னை நோக்கி வரும் ஜீவனை, பரம புருஷன் பெண்ணுருவம் கொண்ட முக்தி அடைந்தஜீவர்களைக் கொண்டு அழைத்து வர ஏவுகிறான்.
வாயம் நதீம் ப்ராபத: ந வா அயம் ஜுகிஷ்யதி இதி:
மம யசஸா விரஜாம் வாயம் நதீம் -
என் அருளாலே இந்த ஜீவன் விரஜா நதியை அடைந்துள்ளான்.
அபிதாவத -ஓடிச்சென்று எதிர் கொள்ளுங்கள்.
தம் பஞ்சசதான்யப்சரசாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா - சதம் அஞ்சன
ஹஸ்தா - சதம் சூர்ன ஹஸ்தா - சதம் வஸொஹஸ்தா - சதம் பநஹஸ்தா - தம் பிரம்மலங்காரேண அலங்குர்வந்தி...
ஐந்நூற அப்சரஸ் பெண்கள் - ஐந்நூறு என்பது கணக்கற்ற என்று
கொள்ளலாம் - கைகளில் மாலைகள் - அஞ்சனம் - சூர்ணம் - ஆடைகள் என்று ஏந்திக் கொண்டு வரவேற்பார்கள்.
ஆழ்வார் இதை அப்படியே தமிழ் செய்திருக்கிறார்:
விதிவகை புகுந்தனர் என்றுநல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியுநற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும்
மதிமுக மடந்தயர் ஏந்தினர் வந்தே - நா.தி. பி. 3880
- விஷ்ணு சித்த நிர்ணயம் என்ற புத்தகத்திலிருந்து
No comments:
Post a Comment