ரவிக்கு விமர்சனம் தேவை. தன் கதை 'எப்படியிருக்கிறது' என்றால் முகநக நட்பு வாழ்த்துகிறது. ப்ளாகர்.காம் சென்று 'மீகாரம்' என்னும் பெயரில் புதிய வலைப்பதிவைத் தொடங்கினான். சொந்த ஊர், பெயரை மறைத்து பொய் சொல்லி படிவங்களைப் பூர்த்தி செய்தான். ஈழப் பிரச்சினையை ஆட்ரியானாவை பிண்ணணியாக வைத்து எழுதிய கதையை மீகாரம் வலைப்பதிவுகளில் இட்டான்.
7 Comments:
சேஷாத்ரி said...
உங்கள் கதை நீளமாக உள்ளதால் பொறுமையாகப் படித்து பின் கருத்து சொல்கிறேன்.
3:05 AM
ரவி said...
சேஷாத்ரி, அவசியம் படித்து பின்னூட்டமிடவும். அட்வான்ஸ் நன்றிகள்.
4:52 AM
Bala said...
கௌதமி என்னும் பெயரைத் தவிர இலங்கைக்கும் இந்தக் கதைக்கும் வேறு சம்பந்தமே இருப்பதாகத் தெரியவில்லை. கோர்வையாக ஒரு விஷயத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு எழுதிப் பழகுங்கள்.
10:09 AM
அனில் said...
வித்தியாசமான ட்ரீட்மெண்ட். ஆனால், மனதில் பதிய மாட்டேன் என்கிறது. நிறைய சொல்ல ஆசைப்படிருக்கிறீர்கள். அதனால் அலைபாய்கிறது. சில மணி நேரக் காலகட்டத்திலேயே சிறுகதை என்பது முடிந்துவிட வேண்டும். உங்களுடையது அரசியல், வரலாறு, புனைவு, ஆசிரியர் எண்ணங்கள், என விரிவதால் சிறுகதை என்று வகைப் படுத்த இயலாது. பல வருடங்களை சுருக்குவதை விட்டுவிட்டு, இதை ப்ளாட்டாக எடுத்துக் கொண்டு குறுநாவலாக்குங்கள்.
10:12 AM
அனில் said...
---ப்ளாட்டாக எடுத்துக் கொண்டு குறுநாவலாக்குங்கள்----
PLOT அல்ல... கரு என்று அர்த்தம் கொடுக்கும் plot. :-)
10:45 AM
Anonymous said...
The stuff you write is utter crap. Please read some quality stories and literature before attempting to write. Don't throw up shit on us by your half-baked stuff. Please show restraint by waiting couple of months after the first write-up, when writing stories. Otherwise, you will get only these dumb-ass narration style.
3:21 AM
No comments:
Post a Comment