சென்னை ஐகோர்ட்டில், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர் உதயகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ரகசிய கடிதம்
மத்திய உளவுப்பிரிவு (ஐ.பி.) இணை இயக்குனராக எஸ்.ஏ.ரிஸ்வீ உள்ளார். இவர், கடந்த ஜூன் 3-ந் தேதி பிரதமர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி ஆகியோருக்கு ஒரு ரகசிய கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘கூடங்குளம் அணு உலையின் பணி, அணு உலை எதிர்ப்பு இயக்கத்தினரின் போராட்டத்தினால் கடந்த 2011-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அமெரிக்காவில் உள்ள ஓகியோ பல்கலைக்கழகம் மற்றும் மேற்கத்திய தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கிய நிதியினை பெற்ற உதயகுமார், இந்த போராட்டத்துக்கு தலைமை வகிக்கிறார். மேலும், ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒருவர், உதயகுமாரை சந்தித்து இந்தியாவில் உள்ள அணு உலைகள் மற்றும் யுரேனியம் கனிமம் குவாரிகள் ஆகியவை அமைந்துள்ள இடங்களையும், இந்தியாவின் அணு உலை திட்டங்களுக்கு எதிராக போராடும் 50 பேரின் விவரங்களையும் கொடுத்துள்ளார். அப்போது மிகப்பெரிய சதி திட்டம் நடந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை
நாட்டின் மிகப்பெரிய பதவிகளை வகிக்கும் நபர்களுக்கு அனுப்பிய இந்த ரகசிய கடிதத்தை இணை இயக்குனர் ரிஸ்வீ, பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ளார். இதன்மூலம், சமுதாயத்தில் எனக்கு உள்ள நற்பெயருக்கு குந்தகம் ஏற்படுத்துவதுடன், மக்கள் மத்தியில் என் மீது தரம் குறைந்த எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் திட்டமிட்டு அவர் செயல்பட்டுள்ளார்.
இந்த ரகசிய தகவல் செய்தியாக ஆங்கில நாளிதழ்கள் மற்றும் டி.வி. சேனல்களில் கடந்த ஜூன் 12-ந் தேதி வெளியாகியுள்ளது.
மேலும், ஒரு நாட்டின் ரகசிய கடிதத்தை பத்திரிகைகளுக்கு கொடுத்தது எப்படி? என்பது குறித்து விசாரித்து இணை இயக்குனர் ரிஸ்வீ மீது துறை ரீதியான விசாரணை நடத்தி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
பதிலளிக்க வேண்டும்
இந்த மனு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை செயலாளருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
---------------------------
’தமிழகத்தில் எஸ்.பி. உதயகுமார்
கேரளத்தில் கே. சகாதேவன்
ஆந்திரத்தில் ககாரியா சஜ்ஜையா
குஜராத்தில் சுரேந்திர கட்கேகர்
ஆகியோருக்கும்
மேகாலயத்தில் காஷி மாணவர் சங்கம்
போன்ற அமைப்புகளுக்கும்
சமூகத்தில் பிரபலமாகவுள்ள ஆர்வலர்கள் -
தேவசகாயம்,
அட்மிரல் ராமதாஸ்
மேதா பட்கர்
நீரஜ் ஜெயின்
கருணா ரெய்னா
பாதிரியார் தாமஸ் கொச்சேரி
போன்றோர் வழிகாட்டிகளாக செயல்படுகின்றனர்’
என்று மத்திய உளவுத் துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-------------------------------------------------
அண்மையில் மத்திய உளவுத்துறையான ஐ பி , தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் N G O பற்றி ஓர் அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்தது.
அண்மையில் மத்திய உளவுத்துறையான ஐ பி , தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் N G O பற்றி ஓர் அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்தது.
அவ்வறிக்கையில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளி உதயகுமார் பற்றியும் அவருக்கு வெளிநாட்டுப் பணம் வந்தது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அவர் ஐ பி மீது வழக்குத் தொடர்வேன் என அறிவித்திருந்தார்.
இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், வெளிநாட்டில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றதாகத் தம் மீது பொய்க் குற்றச்சாட்டு கூறப்பட்டதாகவும் மத்திய அரசின் உளவுத்துறை இணை இயக்குனர் ரிஷியி என்பவர் தமக்கு எதிரான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பினார் எனவும் குறிபிட்டுள்ள உதயகுமர், இந்த அறிக்கை பத்திரிகைகளில் செய்தியாக வெளியாகும்படி கசிய விடப்பட்டுத் தமது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப் பட்டது என்று மத்திய உளவுத்துறை மீது குற்றம் சாட்டியுள்ளார்.
தமக்கு எதிராகப் பொய்யாக ரகசிய அறிக்கை கொடுக்கப்பட்டது தவறானது. ஐபி வேண்டுமென்றே அறிக்கை கொடுத்தது. இந்த அறிக்கையை வெளியிட்ட உளவுத்துறை இணை இயக்குனர் ரிஷியி மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும என்று மனுவில் கூறியுள்ளார்.
.இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி சத்யநாராயணன் , ஒரு வாரத்தில் மத்திய அரசின் உள்துறைச் செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என நேற்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-------------------------------------------------
மெரிக்காவை சேர்ந்த நிறுவனத்துக்காக பணம் பெற்றுக் கொண்டு இந்திய அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக கூடங்குளம் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அறிக்கைகளைக் கொடுத்து வந்தாக உளவு அமைப்பான ஐ.பி. குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் உளவு அமைப்பின் இந்த புகாரை திட்டவட்டமாக கூடங்குளம் உதயகுமார் மறுத்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்துக்கு உளவு அமைப்பான ஐ.பி. அண்மையில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் இந்தியாவில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும் கூடங்குளம் போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சுப. உதயகுமாரின் பெயரை இரண்டு இடங்களில் குறிப்பிட்டு உளவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
ஐ.பி. அறிக்கையில் "அமெரிக்கா மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதயகுமாருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 2010ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் செயல்படும் கிர்வான் இன்ஸ்டியூட் நிறுவனத்திடம் பணி ஒப்பந்தம் ஒன்றை உதயகுமார் பெற்றார். அந்நிறுவனமானது உதயகுமாருக்கு 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 21, 120 அமெரிக்க டாலர் தொகையை வழங்கி வந்தது. இது உதயகுமாரின் பெயரில் உள்ள அமெரிக்க வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு ஒப்பந்த பணி மூலம் அடிக்கடி அறிக்கைகள் அனுப்பி 2012ஆம் ஆண்டு ஏப்ரல் வரை 17,600 அமெரிக்க டாலர் பணம் பெற்றிருக்கிறார். ஜெர்மனியைச் சேர்ந்த ராய்னர் என்பவர் சென்னையில் இருந்து 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி நாடு கடத்தப்பட்டார். அவரது லேப்டாப்பில் இந்தியாவின் 16 அணுசக்தி நிலையங்கள், 5 யுரேனியம் சுரங்கங்கள் உள்ள வரைபடம் இருந்தது. இவை உதயகுமார் உட்பட 5 அணுசக்தி திட்ட எதிர்ப்பாளர்களுக்கு அனுப்பி இ மெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
உதயகுமார் மறுப்பு
இதை கூடங்குளம் உதயகுமார் திட்டவட்டமாக மறுத்து தமது முகநூல் பக்கத்தில் விரிவான மறுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். "சிறையோ, சாவோ, எதுவோ வரட்டும்!" என்ற தலைப்பில் உதயகுமார் வெளியிட்டுள்ள மறுப்பு விவரம்: இந்திய உளவுத் துறை (IB) பிரதமர் அலுவலகத்துக்கு ஓர் அறிக்கை கொடுத்திருக்கிறார்களாம். அதாவது தொண்டு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள், வளர்ச்சித் திட்டங்களுக்கு குறுக்கே நிற்கிறார்கள், மதமாற்றத்துக்கு வழி வகுக்கிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டியிருக்கிறார்களாம். இரண்டு இடங்களில் எனது பெயரைக் குறிப்பிட்டு, அமெரிக்காவில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தோடு எனக்குத் தொடர்பு இருந்ததாகவும், நான் அவர்களுக்கு தொடர்ந்து அறிக்கை சமர்ப்பித்ததாகவும் தவறாக எழுதியிருக்கிறார்கள். ஓஹையோ மாநில பல்கலைக்கழகத்தில் (Ohio State University, Columbus, OH) இயங்கிய கிர்வான் ஆய்வு நிலையத்தின் (Kirwan Institute for the Study of Race and Ethnicity) சர்வதேச ஆய்வு வல்லுனராக (Research Fellow) நான் பணி புரிந்தேன்.
இந்தியாவிலிருந்தபடியே உலகமயமாதல், இன வேறுபாடுகள், சிறுபான்மை அரசியல், பிரிக்ஸ் அமைப்பு போன்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொடுத்தேன். இந்தியாவின் அணுசக்தி பற்றியோ, வளர்ச்சி பற்றியோ நாங்கள் எந்த ஆய்வும் செய்யவில்லை.
நான் அமெரிக்காவில் 1997 முதல் 2001 வரை மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் Institute on Race and Poverty, University of Minnesota எனும் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதன் தலைவராக செயல்பட்ட பேராசிரியர் ஜான் பவல் கிர்வான் ஆய்வு நிலையத்தின் தலைவராகப் பொறுப்பு ஏற்றபோது, என்னை அவரது புதிய முயற்சிக்கு உதவும்படிக் கேட்டுக் கொண்டார். வேலை செய்த நேரத்துக்கு ஏற்ற மாதிரி சம்பளம் கொடுத்தார்கள்.
ஆனால் IB ஆட்கள் வேறுமாதிரி திரித்து கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல ஜெர்மனி நாட்டைச் சார்ந்த ராய்னர் தனது மடிக்கணினியில் இந்தியாவின் அணுசக்தி நிறுவனங்களை ஒரு வரைபடத்தில் குறித்து வைத்திருந்தாராம், அதை நான் உட்பட பலருக்கு அனுப்பிக் கொடுத்தாராம். இப்படியெல்லாம் IB தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள்.
இவர் ஹிப்பி போன்று உலகம் சுற்றித் திரிபவர். நாகர்கோவிலில் சந்தித்த பிறகு, எங்கள் நிகழ்வுக்கு வருவார். வேறு எந்தத் தொடர்பும் இருந்தது இல்லை. பிப்ருவரி 27, 2012 அன்று இந்தியாவை விட்டு அவர் வெளியேற்றப்பட்டபோதே நான் கேட்டேன். அவர் தவறு செய்திருந்தால் ஏன் நடவடிக்கை எடுக்காமல் அவசரம் அவசரமாக வெளியேற்றுகிறீர்கள் என்று. இப்போது புதிய கதை சொல்லுகிறார்கள்.
எங்களில் சிலர் எழுந்து நிற்கும்போது, எங்களை அந்நிய நாட்டின் கைக்கூலிகள், கடத்தல்காரர்கள், ஹவாலாப் பேர்வழிகள் என்று கொச்சைப்படுத்துவது மிகவும் தவறு.
எங்களை இப்படி அசிங்கப்படுத்தினால், அது நமது இளைஞர்களுக்கு தவறான செய்தியைக் கொடுக்கும்; அவர்கள் வன்முறையிலும், தீவிரவாதத்திலும் நம்பிக்கை கொள்ளச் செய்யும். உளவுத் துறையின் இந்த பாசிச நோக்கும், போக்கும் என்னைப் போன்ற தனிநபர்கள், குழுக்கள், மக்கள் இயக்கங்கள், சிறுபான்மையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான முன்னேற்பாடுகள் என்று நினைக்கிறேன்.
------------------------------------------------------------------------
‘தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் அமைப்புகள், நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன’ என்று ஐ.பி., உளவு அமைப்பு தெரிவித்துள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அந்த அமைப்புகள் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து, அவற்றின் சட்ட விரோத செயல்பாடுகளை தடை செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நம் நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள், பிரமாண்ட தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள் போன்றவற்றிற்கு எதிராக செயல்படும், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சில கட்சிகளின் செயல்பாடுகளை, மத்திய அரசின் உளவு அமைப்பான, ஐ.பி., தோலுரித்து காட்டியுள்ளது. தமிழகத்தில், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக செயல்படும், உதயகுமார் தலைமையிலான தொண்டு நிறுவனத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பணம், அதன் மூலம் அவர் மேற்கொள்ளும், அரசுகளுக்கு எதிரான முறைகேடான செயல்பாடுகள், இதன் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளன. ஐ.பி., அமைப்பின், 23 பக்க அறிக்கையில், நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் நிறுவனங்கள் பட்டியலில், கூடங்குளம் உதயகுமாரின் தொண்டு நிறுவனம் உட்பட, 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் இடம் பெற்றுள்ளன.
இந்த அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால், புதிய திட்டங்களை செயல்படுத்த முடியாமல், பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டங்கள் வீணாகப் போனதும், அவற்றில் பல, பிற நாடுகளுக்கு சென்றதும் தெரிய வந்துள்ளது.
குஜராத் முதல்வராக மோடி இருந்த போது, 2009ம் ஆண்டிலேயே, இத்தகைய தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டில் அச்சம் தெரிவித்திருந்தார். அவரின் அப்போதைய எச்சரிக்கையில், குஜராத்தில் செயல்படும், சில அமைப்புகளை பட்டியலிட்டு, அவற்றால், அம்மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியிருந்தார். இப்போது அவர் பிரதமராக ஆகியுள்ளதால், அத்தகைய மோசடி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகியுள்ளார் என்பதை, ஐ.பி.,யின் அறிக்கை காட்டுகிறது.
முதற்கட்டமாக இந்த நிறுவனங்களின் செயல்பாட்டை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தி, அதன் பிறகு, அவற்றை மூடவோ, தடை செய்யவோ, நிதியுதவியை தடை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படலாம் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் பிற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ள நிலையில், இந்தியாவில் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இதை தடை செய்ய வேண்டும் என்பது தான், இந்த மோசடி அமைப்புகளின் முக்கிய நோக்கம். இத்தகைய தொண்டு நிறுவனங்கள், கல்வியறிவு குறைந்த இடங்களிலும், எளிதில் அணுக முடியாத, அரசு உதவிகள் சென்றடையாத இடங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன.
குறிப்பாக, வட கிழக்கு மாநிலங்களின் நீர்மின் திட்டங்கள், அணைகள் போன்ற திட்டங்களுக்கு எதிராக செயல்படுகின்றன. இவற்றிற்கு கோடிக்கணக்கில் வெளிநாடுகளில் இருந்து பணம் வந்து சேர்கிறது. அவற்றை முறையாக அந்த நிறுவனங்கள் பயன்படுத்துகின்றனவா என்பதற்கும் ஆய்வு எதுவும் கிடையாது. அந்த நிறுவனங்களின் தலைவர்கள் யார், எங்கிருந்து வரும் உத்தரவின்படி அவர்கள் செயல்படுகின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. மேலும், இத்தகைய நிறுவனங்கள், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள், கருவிகள் போன்றவற்றுடன் மிகவும் நவீனமாக செயல்படுவதையும், ஐ.பி., தன் அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனங்கள், விரைவில், மோடி அரசின் பிடியில் சிக்கும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கை கழுவியது கூடங்குளம் எதிர்ப்பு அமைப்பு:
”கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் பெயரைச் சொல்லி, உதயகுமார், வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கியிருந்தால், அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கட்டும்,” என, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து, கூட்டமைப்பின் அமைப்பாளர், அண்டன் கோம்ஸ் கூறியதாவது: கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்போராட்டத்தை, மக்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்துக்கு, பல அரசியல் கட்சித் தலைவர்கள், தன்னார்வ அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர்; ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். இந்த வகையில், உதயகுமார், புஷ்பராயன் போன்றோர் ஆதரவு தெரிவித்தனர். அவர்கள், தனிப்பட்ட முறையில், தன்னார்வ அமைப்புகளை நடத்தி வருகின்றனர். அதற்கும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்துக்கும் தொடர்பில்லை. அவர்கள் சாப்பிட்ட உணவு, அவர்களின் மொபைல் போன்களுக்கு, ‘ரீ சார்ஜ்’ செய்ய பணம் போன்றவற்றை மக்கள் தான் கொடுத்துள்ளனர். மக்களுக்கு அவர்கள் பணம் தரவில்லை. அணு உலை எதிர்ப்புப் போராட்டத்துக்காக, வெளிநாடுகளில் இருந்து உதயகுமார் பணம் வாங்கினார் என, மத்திய உளவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. போராட்டத்தின் பெயரைச் சொல்லி, உதயகுமார் பணம் பெற்றிருந்தால், அதற்கு ஆதாரங்கள் இருந்தால், அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், ஒரு தனிப்பட்ட மனிதனின், சுய நடவடிக்கைகளை, போராட்டத்துடன் இணைத்து கொச்சைப்படுத்த வேண்டாம். எங்கள் போராட்டத்தைச் சொல்லி, யாராவது பணம் பெற்றிருந்தால், அவர்களின் பெயர்களை அரசு வெளியிடலாம்; அவர்கள் மீது, நாங்களே சட்ட நடவடிக்கை எடுப்போம். அணு உலை பாதுகாப்பு, அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவுகளை கையாளுதல் போன்றவை குறித்தும், அணு உலை தொடர்பாக ரஷ்யாவுடன் செய்துள்ள ஒப்பந்தம் பற்றியும், மத்திய அரசு, பகிரங்கமாக மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்ற, எங்கள் கோரிக்கை தொடர்கிறது. அதற்காக, தொடர் போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு, அண்டன் கோம்ஸ் கூறினார்.
இதுகுறித்து, கூட்டமைப்பின் அமைப்பாளர், அண்டன் கோம்ஸ் கூறியதாவது: கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்போராட்டத்தை, மக்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்துக்கு, பல அரசியல் கட்சித் தலைவர்கள், தன்னார்வ அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர்; ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். இந்த வகையில், உதயகுமார், புஷ்பராயன் போன்றோர் ஆதரவு தெரிவித்தனர். அவர்கள், தனிப்பட்ட முறையில், தன்னார்வ அமைப்புகளை நடத்தி வருகின்றனர். அதற்கும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்துக்கும் தொடர்பில்லை. அவர்கள் சாப்பிட்ட உணவு, அவர்களின் மொபைல் போன்களுக்கு, ‘ரீ சார்ஜ்’ செய்ய பணம் போன்றவற்றை மக்கள் தான் கொடுத்துள்ளனர். மக்களுக்கு அவர்கள் பணம் தரவில்லை. அணு உலை எதிர்ப்புப் போராட்டத்துக்காக, வெளிநாடுகளில் இருந்து உதயகுமார் பணம் வாங்கினார் என, மத்திய உளவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. போராட்டத்தின் பெயரைச் சொல்லி, உதயகுமார் பணம் பெற்றிருந்தால், அதற்கு ஆதாரங்கள் இருந்தால், அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், ஒரு தனிப்பட்ட மனிதனின், சுய நடவடிக்கைகளை, போராட்டத்துடன் இணைத்து கொச்சைப்படுத்த வேண்டாம். எங்கள் போராட்டத்தைச் சொல்லி, யாராவது பணம் பெற்றிருந்தால், அவர்களின் பெயர்களை அரசு வெளியிடலாம்; அவர்கள் மீது, நாங்களே சட்ட நடவடிக்கை எடுப்போம். அணு உலை பாதுகாப்பு, அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவுகளை கையாளுதல் போன்றவை குறித்தும், அணு உலை தொடர்பாக ரஷ்யாவுடன் செய்துள்ள ஒப்பந்தம் பற்றியும், மத்திய அரசு, பகிரங்கமாக மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்ற, எங்கள் கோரிக்கை தொடர்கிறது. அதற்காக, தொடர் போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு, அண்டன் கோம்ஸ் கூறினார்.
--------------------------------------------------------------------------------
மத்திய அரசின் உளவு பிரிவு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சமீபத்தில் ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் வெளிநாட்டு நிதி உதவி பெறும் சில தொண்டு நிறுவனங்கள், இந்திய வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.
வெளிநாட்டு நிதி உதவியை வைத்து இந்திய வளர்ச்சி திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள் என்றும் இதில் கூடங்குளம் அணுமின்நிலைய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரும் ஒருவர் என்று அவரது பெயரை குறிப்பிட்டு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளது. இந்த அறிக்கை நகல் சமீபத்தில் டெல்லியில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து குமரியில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது, வெளிநாட்டு நிதிஉதவியை பெற்று இந்திய வளர்ச்சிக்கு நான் தடையாக இருப்பதாக மத்திய உளவுபிரிவு ஒரு அறிக்கை அனுப்பி அதில் எனது பெயரையும் குறிப்பிட்டுள்ளது. ரகசியமான இந்த அறிக்கை தற்போது பகீரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்துக்காக உதயகுமாரின் வங்கி கணக்கில் அமெரிக்க பல்கலைக்கழகம் 40 ஆயிரம் டாலர் போட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய அறிக்கையில் உளவுத்துறை கூறியுள்ளது.
உளவுத்துறை அறிக்கை
கடந்த 3–ந் தேதி பிரதமர் அலுவலகத்துக்கு உளவுத்துறை (ஐ.பி.) பரபரப்பு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதன் நகல், ரா அமைப்பின் தலைவர், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், நிலக்கரி செயலாளர், மின்துறை செயலாளர், மத்திய உள்துறை மந்திரி, நிதி மந்திரி, மந்திரிசபை செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்கள், மேலை நாடுகளின் நலன்களுக்காக பாடுபடும் அமைப்பாக இயங்கி வருவதாக உளவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
உதயகுமார்
குறிப்பாக, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ‘அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்’ பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட இயக்கத்தின் அமைப்பாளர் உதயகுமாரின் 2 வங்கி கணக்குகளில் 40 ஆயிரம் டாலர் (ரூ.24 லட்சம்) போடப்பட்டுள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது.
குறிப்பாக, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ‘அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்’ பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட இயக்கத்தின் அமைப்பாளர் உதயகுமாரின் 2 வங்கி கணக்குகளில் 40 ஆயிரம் டாலர் (ரூ.24 லட்சம்) போடப்பட்டுள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது.
அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள ஓகியோ பல்கலைக்கழகம் அப்பணத்தை போட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சுரங்க எதிர்ப்பு இயக்கம்
மேலும், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மீது உளவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அதுபற்றி அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மேலும், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மீது உளவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அதுபற்றி அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கிரீன்பீஸ், கார்ட்எய்ட், ஆம்னஸ்டி, ஆக்ஷன்எய்ட் போன்ற தொண்டு நிறுவனங்கள், பல்வேறு போராட்டங்களை நடத்தி, மேலை நாடுகளின் கைக்கூலிகளாக செயல்படுகின்றன. இதனால், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 முதல் 3 சதவீதம்வரை பாதிப்பு ஏற்படுகிறது. அணுசக்தி எதிர்ப்பு, நிலக்கரி சுரங்கத்துக்கு எதிர்ப்பு, மரபணு மாற்ற பயிர்களுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் இந்த நிறுவனங்கள் போராட்டம் நடத்துகின்றன.
போஸ்கோ, வேதாந்தா போன்ற பெரு நிறுவனங்களின் தொழில் திட்டங்களை தடுத்து நிறுத்துவதுடன், சுரங்கத் தொழில், அணை கட்டுதல், எண்ணெய் துரப்பண பணி போன்றவற்றையும் முடக்கி வருகின்றன.
ரூ.45 கோடி
குறிப்பாக, கிரீன்பீஸ் என்ற தொண்டு நிறுவனம், கடந்த 7 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து ரூ.45 கோடி நன்கொடை பெற்றுள்ளது. நிலக்கரி வெட்டி எடுத்தல், நிலக்கரி மூலம் செயல்படும் மின்உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றுக்கும் தனது எதிர்ப்பை விரிவுபடுத்தி உள்ளது.
குறிப்பாக, கிரீன்பீஸ் என்ற தொண்டு நிறுவனம், கடந்த 7 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து ரூ.45 கோடி நன்கொடை பெற்றுள்ளது. நிலக்கரி வெட்டி எடுத்தல், நிலக்கரி மூலம் செயல்படும் மின்உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றுக்கும் தனது எதிர்ப்பை விரிவுபடுத்தி உள்ளது.
இதுபோல், மரபணு மாற்ற பயிர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் 6 தொண்டு நிறுவனங்களுக்கு ஜெர்மனியிடம் இருந்து பணம் வருகிறது.
இவ்வாறு உளவுத்துறை கூறியுள்ளது.
இவ்வாறு உளவுத்துறை கூறியுள்ளது.
மறுப்பு
இதற்கிடையே, இந்த குற்றச்சாட்டை தொண்டு நிறுவனங்கள் மறுத்துள்ளன. இதுபற்றி கிரீன்பீஸ் அமைப்பின் செயல் இயக்குனர் சமித் அய்ச், மத்திய உள்துறை மந்திரிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
இதற்கிடையே, இந்த குற்றச்சாட்டை தொண்டு நிறுவனங்கள் மறுத்துள்ளன. இதுபற்றி கிரீன்பீஸ் அமைப்பின் செயல் இயக்குனர் சமித் அய்ச், மத்திய உள்துறை மந்திரிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
எங்கள் அமைப்புக்கு இந்தியாவில் உள்ள தனிநபர்கள்தான் நன்கொடை அளிக்கின்றனர். எதிர்ப்பு குரலை நசுக்கும் முயற்சியாக, உளவுத்துறை இக்குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------
கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமாருக்கு அமெரிக்காவில் இருந்து நிதி வழங்கப்பட்டதாக மத்திய உளவுத் துறை குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்தியாவின் வளர்ச்சியைக் குலைக்கும் வகையில் இந்தியாவில் சுமார் 65 அரசு சாரா அமைப்புகளுக்கு மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் நிதியுதவி செய்வதாகவும் உளவுத் துறை தெரிவித்துள்ளது.
மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு தடையை விளைவிக்கும் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் அரசு சாரா அமைப்புகள்' என்ற தலைப்பில் மத்திய உளவுத் துறை பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த 3-ஆம் தேதி 21 பக்க அறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
65 அமைப்புகளின் நடவடிக்கை: "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும் வகையில் அணுசக்தி நிலையங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள், யுரேனியம் சுரங்கம், மெகா தொழிலக திட்டங்கள், நீர் மின் திட்டங்கள், எண்ணெய் வயலில் எரிவாயு உற்பத்திக்காகக் குத்தகை எடுக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக சில அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இப் போராட்டங்களின் தாக்கத்தால் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) 2 முதல் 3 சதவீதம் வரை சரிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
"நிலக்கரிச் சுரங்க திட்டங்களுக்கு எதிராகப் போராடும் "க்ரீன்பீஸ்' உள்ளிட்ட 17 வெளிநாடுகளின் நிதியுதவி பெற்று செயல்படும் அரசு சாரா நிறுவனங்கள் உள்பட மொத்தம் 65 அமைப்புகள், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடையை ஏற்படுத்துவதாக உள்ளன.
கூடங்குளம் போராட்ட சர்ச்சை: இதேபோல, கூடங்களத்தில் அணுசக்திக்கு எதிராகப் போராடி வரும் மக்களை, அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் பயின்றுவிட்டு தாயகத்திலேயே தங்கியுள்ள எஸ்.பி. உதயகுமார் வழிநடத்தி வருகிறார். இவர்கள் சார்ந்த அமைப்புக்கு சில மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனங்கள் நிதியதவி செய்து வருகின்றன.
இந்தியாவில் அணு உலைக்கு எதிராகப் போராடும் உதயகுமார் உள்பட 5 பேருக்கு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஹெர்மன் சில மாதங்களுக்கு முன்பு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்தியாவில் உள்ள அணு உலைகள், யுரேனிய சுரங்கங்கள் போன்றவை இடம் பெறும் வரைபடத்தையும், அணுஉலைக்கு எதிராகப் போராடும் 50 ஆர்வலர்களின் தொடர்பு விவரங்களையும் மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர் சென்னை வந்தபோது அவரது மடிகணினியில் மின்னஞ்சலில் இடம் பெற்றிருந்த விவரங்கள் பதிவாகியிருந்தன.
அவர் குறிப்பிட்ட 50 பேரில் 28 பேர் அணுஉலை தீவிர எதிர்ப்பாளர்கள் என்றும் மீதமுள்ள 22 பேர் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் என்றும் தெரிய வந்தது.
2010-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள "இன, நிற ஆய்வு நிறுவனம்' மூலம் அமெரிக்காவில் உள்ள வங்கிக் கணக்கில் 2011-ஆம் ஆண்டு ஜூன் வரை உதயகுமாருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 12.68 லட்சம், பின்னர் 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை 10.56 லட்சம் பணம் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எஸ்.பி. உதயகுமார், கேரளத்தில் கே. சகாதேவன், ஆந்திரத்தில் ககாரியா சஜ்ஜையா, குஜராத்தில் சுரேந்திர கட்கேகர் ஆகியோருக்கும் மேகாலயத்தில் காஷி மாணவர் சங்கம் போன்ற அமைப்புகளுக்கும் சமூகத்தில் பிரபலமாகவுள்ள ஆர்வலர்கள் தேவசகாயம், அட்மிரல் ராமதாஸ், மேதா பட்கர், நீரஜ் ஜெயின், கருணா ரெய்னா, பாதிரியார் தாமஸ் கொச்சேரி போன்றார் வழிகாட்டிகளாக செயல்படுகின்றனர்' என்று மத்திய உளவுத் துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"சட்ட நடவடிக்கை எடுப்பேன்'
மத்திய உளவுத் துறை அறிக்கையில் தனது பெயர் இடம்பெற்றிருப்பது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.பி. உதயகுமார் விளக்கம் அளித்தார்.
தில்லியில் உளவுத் துறை அறிக்கையில் இடம்பெற்றிருந்த சமூக ஆர்வலர்கள் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தனர். அப்போது, விடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இடிந்தகரையில் இருந்தபடி உதயகுமார் பேசியது:
"அமெரிக்காவின் ஓஹியோ மாகாண பல்கலைக்கழகத்தின் கிர்வான் இன, நிற ஆய்வு நிறுவனத்துக்காக இந்தியாவில் இருந்தபடி நான் ஆய்வுக்கட்டுரைகள் எழுதினேன். உலகமயமாக்கல், இன வேறுபாடுகள், சிறுபான்மை அரசியல், பிரிக்ஸ் அமைப்பு போன்ற தலைப்புகளில் கட்டுரை எழுதினேன். ஆனால், அணுசக்தி பற்றியோ, வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாகவோ நான் எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை.
நான் நேர்மையானவன். வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு போராடவில்லை என்பதை பலமுறை தெளிவுபடுத்தி விட்டேன். இது பற்றி சட்ட நடவடிக்கை எடுப்பேன். உளவுத் துறையின் அறிக்கையால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது' என்றார் உதய குமார்.
No comments:
Post a Comment