http://1paarvai.wordpress.com/2006/08/09/www-thenkoodu-com/
தேன்கூடு
தமிழ் வலைப்பதிவுகளின் இணையம்
இது ஒரு தமிழ் வலைப்பதிவுகள் திரட்டி. இங்கே எனது வலைப்பதிவையும், சிறிது
நாட்களுக்கு முன் தான் சேர்த்திருந்தேன். எனக்கு இப்படி
தேன்கூடு
தளம் இருப்பதே தெரிந்திருக்கவில்லை.
தமிழ்மணம்
என்பது மட்டும் தான் அறிந்திருந்தேன். இதைவிட வலைப்பதிவு ஒன்றை இவ்வளவு இலகுவாக
உருவாக்கலாம் என்று கூட எனக்கு அண்மைக்காலம் வரை தெரிந்திருக்கவில்லை. கூகிள்
முத்தமிழ் குழுமத்தில்
நண்பர்கள் எனக்கு இதை அறிமுகப்படுத்தினார்கள்.
தேன்கூடு
இதில் எனது வலைப்பதிவை திடீரென்று அவர்களது
பட்டியலிலிருந்து அகற்றிவிட்டார்கள்.
நான் தொடங்கிய முதல் வலைப்பதிவு "ஒரு பார்வை
அனைத்து விடயங்களைப் பற்றி எனது கருத்துக்களைத் தெரிவிக்கும் வலைப்பதிவாக
அமைத்தேன். அதனோடு எனது கணினி சம்பந்தமான துணுக்குகளையும் இடுவதுண்டு.
தமிழ்மணம்
எனது இடுகைகள் அவர்களது வலைத்தளத்தில் தெரியவில்லை. காரணம், எனது வலைப்பதிவு
WordPress.com
தமிழ்மணம்
மற்றும் பின்னூட்டங்கள் தெரிய அவர்கள் வழங்கும் "'பதிவு' கருவிப்பட்டை" ஐ எனது
வலைப்பதிவில் நிறுவ வேண்டும். WordPress.com இயங்கு தளம் எந்த ஒரு JavaScript
(அ) template modification இற்கும் உரிமை அளிக்காத தளம். இதனால்,
தமிழ்மணம்
சேர்க்கப்பட்டிருந்தாலும் அதன் முழு உபயோகத்தைப்
பெறமுடியவில்லை.
இதற்காக blogspot.com இயங்கு தளத்திற்கு மாற்றலாம் என்று கூட சிந்திக்க
அரம்ப்பித்தேன். எனக்கு "WordPress" என்னும் பெயர் எனது கருத்தை வெளி உலகுக்கு
கொணரும் பெயராக பொருந்தி இருப்பதால், எனக்கு அதை விடவும் விருப்பமில்லாமல்
இருந்தது. அதைவிட வேறொரு விடையத்தையும் கவனித்தேன். தேடு தளங்களில் [search
engines] சில பொதுவான சொற்களைத் தேடும்போது கூட எனது வலைப்பதிவுகள் முதல்
பக்கத்திலேயே காணக்கண்டேன். அந்த சொற்கள் வேறு தளங்களில் மூல கருத்தாக
இருந்தும் கூட எனது தளம் முதலில் வருவது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தன.
இதற்காக எனது தளத்தில் மேலதிகமாக நான் எதையும் நிறுவியது கிடையாது.
அப்படியானால், WordPress.com இதற்கான வேலையை செவ்வனே செய்கிறது. இதனால்,
WordPress.com ஐ விட்டு பிரியாமல் நின்றுவிட்டேன்.
அடுத்ததாக தேன்கூடு
கேள்விப்பட்டு அங்கே எனது வலைப்பதிவை சேர்க்க வேண்டுகோள் விடுத்தேன். அடுத்த 24
மணி நேரத்திற்குள் இணைத்துவிட்டார்கள். இங்கே எனது புதிய இடுகைகள், நான்
எதையும் நிறுவாமல் (அ) சேர்த்துக்கொள்ளாமல், தானாகவே தெரிந்தன. எனக்கு மட்டற்ற
மகிழ்ச்சி.
அதன்பின் நான் எழுதும் ஒவ்வொரு புதிய இடுகைகளும்
தேன்கூடு
இடுகை தான் இப்போது எனது வலைப்பதிவு
அகற்றப்படுவதற்கும் காரணமாயிற்று.
நான் 2006/08/01 அன்று எழுதிய இடுகை " இந்தியாவின் புலி -
01
இந்தியாவின் வெளிவிவகார செயற்பாடுகளும் புலிகளும் சம்பந்தமாக எழுதினேன். இதை
பார்த்த தேன்கூடு
அவர்களது பட்டியலிலிருந்து அகற்றி விட்டார்கள். எனக்கு இது தெரியவர நான்
2006/08/04 அன்று அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்.
May I ask why have you deferred my blog?
ttp://1paarvai.wordpress.com/
அன்றே எனக்கு மறுமொழி வந்தது.
We will get back to you regarding this soon.
________,
Thenkoodu Portal Support.
அதன் பின் பல தடவைகள் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன். எந்த காரணம்
சொல்லியும் எந்த பதிலும் இதுவரை வரவில்லை.
நான் எழுதியது எந்த இனத் துவேசமாகவோ, (அ) மதத் துவேசமாகவோ இல்லை. பல மதத் துவேச
வலைப்பதிவுகள் தேன்கூடு தளத்தில் இன்னும் புதிய இடுகைகளாக வந்து கொண்டு தான்
இருக்கின்றன. ஒரு ஈழத்தமிழனாக எனது மனக்குமுறலை எழுதியிருந்தேன். முஸ்லிம் -
இந்து துவேசம் எழுத தடையில்லை; இஸ்ரேல் - ஃகெஸ்புல்லா பற்றி எழுத தடையில்லை;
இந்தியா - பாகிஸ்தான் பற்றி எழுத தடையில்லை; புலி எதிர்ப்பு வலைத்தளங்கள்
அனுமதிக்கபடுகின்றன. ஆனால் இந்தியா - புலி பற்றி எழுத தடையா? புலிகள் பற்றிய
இடுகைகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால், புலிகளும் இந்தியாவும் பற்றி எழுத
மட்டுமே தடைபோல் தெரிகிறது.
எனது கணிப்பில், கீழே உள்ள வரிகள் தான் எனது வலைப்பூ அகற்றப்பட்டமைக்கு காரணம்
என்று தோன்றுகிறது.
"புலிகள் ராஜீவ் காந்தியை கொல்வதற்கு மூல காரணமே இந்தியா தான்! நாங்கள் வளர்த்த
புலிகள் எது சொன்னாலும் தலையை ஆட்டுவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு
புலிகளின் ஒப்புதல் இல்லாமலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆயுத
ஒப்படைப்பின் பின் போராளிகளுக்கு பொது மன்னிப்புத் தரப்படும் என்று சொன்ன
இந்தியா புலி வீரர்கள் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாயிருந்தது. [இது பற்றிய
எனது இடுகை: ராஜீவ் காந்தியின் கொலை
தப்பா?
]"
உண்மை என்று மறைக்க முற்படுகிறார்களோ? நான் வேறோர் இடுகையில் எழுதியது சரி
என்று இது நிதர்சனமாக்குகிறது.
" இந்தியா தமிழனுக்கு உண்மையில் ஆதரவு அளிக்கவில்லை துரோகம் தான் செய்தது.
ஆனால், இந்த விசயம் இந்தியர்களுக்கு எட்டாத வண்ணம் இந்திய அரசாங்கமும்,
பார்ப்பனர்களே அதிகமாக இருப்பதால் [அண்மையில் வெளியான புள்ளி விபரம் சொல்கிறது]
எல்லா செய்தி ஊடகங்களும்
செய்துவிட்டன.
"
சரி ஏதோ தேன்கூடு
ஏன் சும்மா அலட்டிக்கொள்கிறீர்கள் என்று சொல்கிறீர்களா? அப்படி ஒரு மறுமொழி
வரும் என்று தான் இவ்வளவு நாளும் காத்திருந்தேன். ஆனால்,
தேன்கூடு
பார்க்கமுடியாத வண்ணம் செய்துவிட்டார்கள். எனது IP
Address ஐ தடை செய்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். இதன் பின் தான் இந்த
தேன்கூடு
நாதி அற்ற தமிழர் நாம்
http://1paarvai.wordpress.com/2006/08/09/www-thenkoodu-com/
No comments:
Post a Comment