Clarification Sought
மற்ற பதிவர்களின் பின்னூட்டங்களை நமது வலைப்பதிவில் இடுவதற்கு முன், அவற்றை எழுதியவர்களிடம் இருந்து அனுமதி கோரி, பெற்ற பிறகே இட வேண்டுமா? நான் வலைப்பதிவு ஆரம்பித்தபோது அவ்வாறு செய்யுமாறு மதி கந்தசாமியாலும் பிகே சிவகுமாராலும் பணிக்கப் பட்டேன்.
இந்த மறுமொழிகள் தங்களின் பதிவுகளிலே இடம்பெற்றிருந்தால் மறுபடி பதிக்க முனுமதியைக் கோர வேண்டாம் என்றும் ஆலோசனை சொல்லியிருந்தார்கள். மேலும், பின்னூட்டங்களை முழுமையாகவோ, அல்லது குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் வேறு எங்காவது இட்டிருந்தாலோ கண்டிக்கத்தக்கது என்றும் வருந்தியிருந்தார்கள்.
மறுமொழிகள் இடம் பெற்ற வலையகத்தின் சுட்டியைத் தந்திருந்தாலும் வருந்தத்தக்க செய்கையாக நினைக்கப்பட்டது. இது குறித்த விவாதங்களை என்னால் முழுவதுமாக கவனித்து ஊன்றித் தொடர முடியாத நிலை. முடிவில் என்ன கருத்து ஒப்புக்கொள்ளப்பட்டது என்று தனிமடலில் தெரிவித்தால், என்னுடைய புரிதலை மேம்படுத்த உதவும்.
முதலியார் ஓலைகள்
14 hours ago
No comments:
Post a Comment